உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி: அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் சென்று வழிபட்டனர்.


அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பொங்கல் பூச்சாட்டு விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !