உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவலைப்படாதே என சாரதாதேவி அறிவுரை வழங்குகிறார்

கவலைப்படாதே என சாரதாதேவி அறிவுரை வழங்குகிறார்

* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். கவலைப்படாதே.   
* மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.  
* துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு. அதை தாங்கிக் கொள்.
* நம்பிக்கையுடன் செயல்படு. வெற்றி பெறுவாய்.  
* எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கடவுளின் நாமத்தை சொல்.     
* முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்வில் உயரலாம்.  
* சுறுசுறுப்புடன் செயல்படு. மனதில் தீய எண்ணமே வராது.
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய்.
* நல்ல மனதுடன் இரு. உலகமும் நல்லதாகவே தெரியும்.  
* எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்.
* இக்கட்டான சூழலில் கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார்.  
* போதும் என்ற மனதுடன் இரு. மகிழ்ச்சி தானாகவே வரும்.  
* பக்தி இருந்தால் எந்தவொரு செயலையும் முடிக்கலாம்.
* பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
* நல்ல செயல்களை செய். பாவம் குறைய ஆரம்பிக்கும்.   
* பிறரை குறை சொல்லாதே. மீறினால் அதுவே இயல்பாகி விடும்.
* மதம் பிடித்த யானை போன்றது மனம். அதைக் கட்டுப்படுத்து.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !