உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்கும்?.. என்ன மாற்றம் வரும்.. உங்களுக்கு எப்படி இருக்கும்!

தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்கும்?.. என்ன மாற்றம் வரும்.. உங்களுக்கு எப்படி இருக்கும்!

பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ராசியில் ரிஷப லக்னத்தில் இது பிறக்கிறது.


இந்த ஆண்டு செப்டம்பர் முதல் அதிக மழை பெய்யும். மழை நீர் சேகரிக்கப்படாததால் கடலில் கலக்கும். ஆனாலும் விளைச்சல் பெருகும். பசுக்களின் வளர்ச்சியால் பால் உற்பத்தி அதிகரிக்கும். எரிவாயு, சோலார் மூலம் மின்சார உற்பத்தி அதிகரிக்கும். நம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பிற நாட்டினர் ஆச்சரியப்படுவர்.  புதிய வைரசால் நோய் பரவும். சித்த, ஆயுர்வேத மருத்துவத்தால் அதன் பாதிப்பு குறையும்.   புதிய மருந்து தயாரிக்கப்படும். தங்கம், வெள்ளியின் விலையில் எப்போதும் மாற்றம் இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடி அதிகரிக்கும்.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்படும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் போன்றவை நம்முடன் அடிக்கடி தகராறில் ஈடுபடும்.  ஈரான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் கடும்பாதிப்புக்கு ஆளாவர். தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கும் கட்சிக்கு, கூட்டணி கட்சியினரால் பிரச்னை உருவாகும்.  


எந்த நட்சத்திரத்திற்கு நன்மை: பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்,  புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி 


கிரகங்களின் நிலை: ஆண்டு முழுவதும் சனி பகவான், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். 2026, நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். அதன் பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிக்கின்றனர்.  2026 மே 26 வரை குரு மிதுனத்திலும், அதன்பின் கடகத்தில் உச்சமாகிறார். அக்.20ல் சிம்மத்திற்கு செல்பவர்  2027, பிப்.13ல் மீண்டும் கடகத்திற்கு வருகிறார். வலிமை மிக்க கிரகங்களான சனி, ராகு, கேது, குரு ஆகியவற்றுடன், ராஜ கிரகமான சூரியனின் பலத்தையும் கணக்கில் கொண்டு 27 நட்சத்திரங்களுக்கும் பலன் தரப்பட்டுள்ளது. 


மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் அறிய கிளிக் செய்யவும்..https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=568


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !