குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்த குட ஊர்வலம்
ADDED :169 days ago
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று தீர்த்த குட அபிஷேக ஊர்வலம் நடந்தது.
குன்னூர் 24 மனை தெலுங்கு செட்டியார் குழுவினரின் இந்த விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், நடந்தது. விழாவில், அம்மன் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். முக்கிய தேர்த்திருவிழா நாளை தாசப்பளஞ்சிக குழுவினர் சார்பில் நடக்கிறது. பிற்பகல் 12:55 மணிக்கு திருத் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. விழாவையொட்டி பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 17 ல் முத்துபல்லக்கு, 18ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது