உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி, மணக்குள விநாயகர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள மூலவர் விநாயகர் சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மேலும், காந்தி வீதி வேதபுரீஸ்வரர், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், ரயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. முத்தியால்பேட்டை தென்கலை சீனுவாச பெருமாள் கோவில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் கோவில், வில்லியனுார் திருகாமீஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர், தவளக்குப்பம் சொர்ணா பைரவர் கோவில், ஆயிற்றுார் மகாதேவர் சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !