அன்னை சாரதா தேவியார் கோயில் மகா கும்பாபிஷேகம்
தேவகோட்டை: தேவகோட்டை அருகே காரைக்குடி ரோட்டில் உள்ள தென்ஜெயராம்பாடியில் அன்னை சாரதா தேவியார் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றி விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளன. இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம், இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்து பூர்ணாகுதியை தொடர்ந்து கும்பங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். தொடர்ந்து கோயிலில் சுவாமிகளுக்கு , அன்னை சாரதா தேவிக்கும் மகா அபிஷேகம் நடந்தது. மதுரை ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த அடியார்கள் ராமகிருஷ்ண பூஜை செய்தனர். பக்தர்களும் இணைந்து பாடினர். மதியம் சிறப்பு பஜனை தொடர்ந்து பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமையில் மாநிலம் முழுவதிலும் இருந்து ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவியர், மற்றும் அம்பாக்கள், ஏராளமானோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பேராசிரியர் திண்ணப்பன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், இலக்கிய மேகம் சீனிவாசன் பங்கேற்றனர். சாரதேஸ்வரி ப்ரியாம்பா, ராமகிருஷ்ண ப்ரியாம்பா ஏற்பாடுகளை செய்தனர்.