உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எரியோட்டில் சித்திரை விழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

எரியோட்டில் சித்திரை விழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

எரியோடு: எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன், வீரநாகம்மன், எருதமதாத்தப்பன், கிருஷ்ணர், முனியப்பசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது. ஆண்டுதோறும் சித்திரை 10ல் நடக்கும் இவ்விழா நடப்பாண்டு ஆண்டில் அன்று தேர்தல் ஓட்டுப்பதிவு இருப்பதால் 3 நாட்கள் முன்கூட்டியே நடந்தது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14ல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். செம்பாறை கன்னிமார் கோயில் ஊற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். நேற்று காலை தீர்த்த அபிஷேகம், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாட்டினை ஒக்கலிகர் வெள்ளவர் குல சங்க தலைவர் பாதர்வெள்ளை, செயலாளர் வையாபுரி, பொருளாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !