உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரையடி மாடசாமி கோயிலில் 18ம் தேதி கும்பாபிஷேகம்

கரையடி மாடசாமி கோயிலில் 18ம் தேதி கும்பாபிஷேகம்

திருநெல்வேலி: பாளை.,ரெட்டியார்பட்டி வீரியப்பெருமாள் சாஸ்தா மாடத்தி சமேத கரையடி மாடசாமி கோயிலில் வரும் 18ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பாளை.,ரெட்டியார்பட்டி சித்தி விநாயகர் பூர்ண புஷ்பகலா சமேத வீரியபெருமாள் சாஸ்தா மாடத்தி சமேத கரையடி மாடசாமிகோயிலில் வரும் 18ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைமுன்னிட்டு இன்று(16ம் தேதி) மாலை 4 மணிக்கு சங்கிரஹணம், பாலிகா ஸ்தாபனம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நாளை(17ம் தேதி)காலை 8 மணிக்கு திருமுறை பாராயணம், வேதபாராயணம், 2ம் கால யாகசாலை பூஜை, விசேஷ ஹோமம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 18ம் தேதி திருமுறை  பாராயணம், வேதபாராயணம், நான்காம் கால யாகசாலை பூஜை, சந்தானம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !