மாமல்லபுரம் ஸ்தலசயனர் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் விமரிசை
ADDED :162 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இக்கோவிலில், இன்று காலை 3:00 மணிக்கு, விஸ்வரூப பூஜையும், தொடர்ந்து நித்ய பூஜையும் நடந்தது. பின்னர், பேரிதாடனம் எனப்படும் கொடியேற்ற நடைமுறைகள் நடந்து, ஸ்தலசயன பெருமாள், கொடியேற்ற பகுதியை அடைந்தார். கொடிமரத்திற்கு, துாப தீபமேற்றி, கொடிமர கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன், காலை 5:00 மணிக்கு கருடக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் சிறிய மாடவீதியில் எழுந்தருளி, நவசந்தி பூஜை நடத்தி, தேவைதைகள் பிரம்மோத்சவத்திற்கு அழைக்கப்பட்டனர். பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி திவ்விய பிரபந்த பாடல்கள் பாடி, ஸ்தலயசயன பெருமாள், தேவியருடன், கேடய சேவையுடனும், இரவு மங்களகிரி சேவையுடனும் வீதியுலா சென்றார்.