உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாட்டம்

ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாட்டம்

காரமடை: சொர்க்கவாசல் வீதி ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் 40 வது ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆராதனம் ரக்ஷா பந்தனும் சுத்து புண்ணியாவதனம் ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண ஆஞ்சநேய விக்கிரக ஆராதனம், ராம நாம லக்ஷார்ஜனை, ஸ்ரீ ராம ஆஞ்சநேய ஹோமங்கள் லோக சேமத்திற்கு மகா சுதர்சன ஹோமமும் நடந்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை ஸ்ரீதர் பாகவதர் குழுவினர் மற்றும் ஸ்ரீ பகவன் நாம பஜனை சபா ஆகியோர் நடத்தி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் திருக்கல்யாண பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு 1008 வடைகள் கொண்ட மாலை சாத்துப்படி செய்யப்படுகிறது. மேற்படி வைபவங்களை ஸ்ரீ ராம நாமி உற்சவ கமிட்டியார் மற்றும் ஸ்ரீ ஜெய மாருதி சேவா சங்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !