/
கோயில்கள் செய்திகள் / அண்ணாமலையார் கோவில் குவியும் ஆந்திரா பக்தர்கள்: அதிகரிக்கும் செங்கல் வழிபாடு
அண்ணாமலையார் கோவில் குவியும் ஆந்திரா பக்தர்கள்: அதிகரிக்கும் செங்கல் வழிபாடு
ADDED :3 minutes ago
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம்.
பௌர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்களும் சனி ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சாமி தரிசனம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை அண்ணாமலையாரிடம் கோரிக்கையாக வைத்து வழிபாடு நடத்தி காணிக்கை பூஜை உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சொந்த வீடு கட்டுவது என்பது பெரும்பாலான பொதுமக்களின் கனவாகவே இருந்து வரும் நிலையில் அண்ணாமலையாரை தரிசித்து வழிபட வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு வேண்டுதல் வைக்கும் விதமாக செங்கற்களை அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்திற்குள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசித்து விட்டு வெளியே செல்லும் வழியில் உள்ள ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பே கோபுரம் அருகே அடுக்கடுக்காக அடிக்கி வைத்துவிட்டு தங்கள் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று அண்ணாமலையாரை வணங்கி செல்கின்றனர்.
கோயிலுக்கு வருகை தந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் இதை பார்த்துவிட்டு தாங்களும் வீடு கட்ட வேண்டும் என்கின்ற வேண்டுதலை செங்கற்களை அடுக்கி வைத்து விட்டு அண்ணாமலையாரை வணங்கினர் என்பதை குறிப்பிடத்தக்கது. இதனால் வரை அண்ணாமலையார் திருக்கோயில் இதுபோன்று செங்கற்களை அடித்து அடுக்கி வைத்து வேண்டுதல் வைத்த நிகழ்வு ஏற்படாத நிலையில் இன்று புதிதாக யாரோ ஒரு பக்தர் சங்கர் கலை அடுக்கி வைத்து வேண்டுதல் வைத்த நிலையில் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் அவரை பார்த்துவிட்டு அங்கிருந்த செங்கற்களை அடுக்கி வீடு கட்டுவதற்கு வேண்டுதல் வைத்தது பக்தர்களிடையே அனைவரும் செய்வதற்கு தூண்டியது. இதனை பார்த்த கோயில் நிர்வாகம் கோயிலில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை வைத்து இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை உடனடியாக அப்பொருள் படுத்தும் பணியில் ஈடுபடுத்தி வைத்தனர். அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து வீடு கட்டுவதற்காக வேண்டுதல் வைக்கும் விதமாக செங்கற்களை அடுக்கி வைத்துவிட்டு சென்றதைப் பார்த்து அனைத்து பக்தர்களும் அதே போல் செங்கற்களை அடுக்கி வைத்து அண்ணாமலையரிடம் வழங்கிய சம்பவம் இன்று அண்ணாமலையார் கோயிலில் பரபரப்பு ஏற்படுத்தியது