உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா

கள்ளக்குறிச்சி சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜா நகர் சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா நடந்தது.


சத்ய சாய்பாபாவின், 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சாயி காயத்ரி பாராயண ஆராதனை மற்றும் சாயி பஜன் நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து தரப்பினரும், பாலவிகாஸ் குழந்தைகள் பங்கேற்றனர். ஆரத்தி முடிந்த பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கன்வீனர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், மகிளா ஒருங்கிணைப்பாளர்கள் விஜயா, உஷா, கிருஷ்ணவேணி, ஜெயந்தி, தமிழ்செல்வி, கீதா உள்ளிட்ட சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !