உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் பேட்டரி கார் தீப்பிடித்தது.

பழநி முருகன் கோயில் பேட்டரி கார் தீப்பிடித்தது.

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் பேட்டரி காரில் தீப்பிடித்தது.


பழநி அடிவாரம் கிரிவீதியில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் பயணிக்க வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பஸ் இலவசமாக இயக்கப்படுகிறது. நேற்று இரவு கிரிவீதி அடிவாரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே 17 பேர் அமரக்கூடிய பேட்டரி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் பின்புற பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். காரில் பக்தர்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் கிரிவீதியில் சென்ற பக்தர்கள் அச்சமடைந்தனர். கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !