தீவனுார் பொய்யாமொழி விநாயகர் வீதியுலா
ADDED :1 days ago
திண்டிவனம்: தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை யொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
திண்டிவனம் அடுத்த தீவனுாரில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பிரம்மோற்சவத்தையொட்டி, 4ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் அன்ன வாகனத்தில் வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் செய்திருந்தார்.