உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா

ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனர்.

கோயிலில் தினமும் பல்வேறு வாகனங்களில் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி வீதி உலா வருகின்றனர். நேற்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய நிலையில், இன்று காலை நடராஜர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் திக்விஜயம் நடக்கிறது. நாளை விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !