யாளி வாகனத்தில் வீதியுலா
ADDED :164 days ago
மாமல்லபுரம்: சித்திரை பிரம்மோத்சவ விழாவின் நான்காம் நாளான நேற்று, ஸ்தலசயன பெருமாள் யாளி வாகனத்தில், திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரம்மோத்சவ விழா வருடாவருடம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த வருடமும் கொடியேற்றத்துடன் துவங்கிய விழா நான்காம் நாளான நேற்று பெருமாள் யாளி வாகனத்தில் திருவீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.