பிரதோஷம், மகாளய அமாவாசை: நாளை முதல் 11ம் தேதி வரை சதுரகிரியில் பக்தர்கள் வழிபட அனுமதி
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு நாளை 8ம் தேதி முதல் 11 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை(அக்.8) முதல் 11ம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் மலையேறி வழிபட வனத்துறை அனுமதியளித்துள்ளது. வத்திராயிருப்பு, மகாராஜபுரம் சந்திப்பு, மந்தித்தோப்பு, தாணிப்பாறை ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவர். பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று, சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சன்னதி எதிரே உள்ள புதிய பாதை வழியாக வெளியே வந்து, சந்தன மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து விட்டு, இரும்பு பாலத்தின் வலதுபுறமாக கீழே இறங்கிச் செல்ல வசதியாக ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக், பாலிதீன் கொண்டு செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.