உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் புனித நீர் அபிஷேகம்; கூழ் காய்ச்சி வழிபாடு

மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் புனித நீர் அபிஷேகம்; கூழ் காய்ச்சி வழிபாடு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, கணபதி ஹோமம், யாக பூஜைகள் நடைபெற்று மூலவருக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பெரிய அண்டாவில் கூழ் காய்ச்சப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !