உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். புதன் கிழமை பெருமாளுக்கு உகந்த தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !