பொது சேவையில் 25 ஆண்டுகள் நிறைவு; விநாயகர் கோவிலில் மனமுருகி வழிபட்ட பிரதமர் மோடி
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு நடத்தினார்.
மக்கள் சேவையில் தனது 25 ஆண்டுகாலப் பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்தார். பொதுச் சேவையில் தனக்கிருக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, அதே மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் நாட்டிற்குத் தொடர்ந்து சேவையாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: டில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டேன். நாடு முழுவதும் உள்ள எனது சக குடிமக்களின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக ஸ்ரீ விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்தேன். தடைகளை நீக்கும் அந்த இறைவனின் அருளால் அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும்; மேலும், நமது நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.