நவக்கிரக கோட்டையில் வருஷாபிஷேகம்: மழை வேண்டி பிரார்த்தனை
ADDED :165 days ago
பல்லடம்: பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் விழாவை துவக்கி வைத்தார். வருஷாபிஷேகத்தை முன்னிட்டும், மழை வேண்டியும், வருண பகவான் மூல மந்திர வேள்வி நடந்தது. முன்னதாக , காலை, 7.00 மணிக்கு, விநாயகர் வேள்வி வழிபாட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நவகிரக வேள்வி மற்றும் மழை வேண்டி பிரார்த்தனை நடந்தது. மதியம், 12.00 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதனையடுத்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.