அழகப்ப கவுண்டன்புதூர் முனியப்பன் கோவில் திருவிழா
அன்னூர்: அழகப்பகவுண்டன்புதூர், முனியப்பன் கோவில் பூச்சாட்டு திருவிழா இன்று நடந்தது.
பொகலூர் அருகே அழகப்ப கவுண்டன் புதூரில் உள்ள பழமையான முனியப்பன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 26ம் தேதி வரை தினமும் மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 27ம் தேதி காலை குளத்தோட்டத்தில் இருந்து குதிரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அம்மன் அழைத்தல் நடந்தது. நேற்று காலை சாமியை கங்கையில் விடும், நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கரகம் எடுத்தலும், கங்கையிலிருந்து தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வருதலும் நடந்தது. இன்று காலை பொங்கல் வைத்தலும், முனியப்ப வாகனத்தை, பொகலூரிலிருந்து கோவிலுக்கு கொண்டு வருதலும் நடந்தது. இதையடுத்து மாவிளக்கு பூஜை, கிடாய் வெட்டுதல் நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.