உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பத்துார் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கடம்பத்துார் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே ஸ்ரீதேவிகுப்பம் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.


கடம்பத்துார் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சி, ஸ்ரீதேவிக்குப்பத்தில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி, கோ பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தியும், பிரவேச பலியும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !