உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது.


பழநியில் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் இரவு 7:00 மணிக்கு மேல் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடக்கிறது. ஏப்.28., இரவு 8:15 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இன்று (ஏப்.30.,) காலை லட்சுமி நாராயண பெருமாள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் ரதவீதிகளில் நடந்தது. இன்று (மே.1.,) இரவு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும். பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏப்.30.,ல் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சப்பரத்திலும் எழுந்தருளினர். இன்று (மே.1.,)சித்ரா பவுர்ணமி காலை, பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். இரவு முத்துக்குமாரசுவாமி,வள்ளி தெய்வானை, வெள்ளி ரதத்தில் ரத வீதிகளில் புறப்பாடு நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !