விக்கிரவாண்டி சுத்தவராகி அம்மனுக்கு சித்ரா பவுர்ணமி பூஜை
ADDED :17 minutes ago
விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த டி.முத்தியால்பேட்டை சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது.
பூஜையையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு யாகம் நடந்தது. 8:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது. 10:00 மணிக்கு சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு பவுர்ணமி பூஜையும், இரவு 7:30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.