கதவுகரை பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.
கதவுகரையில், 250 ஆண்டு பழமையான பகவதி அம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த ஏப். 21ம் தேதி துவங்கியது. பகவதி அம்மன், விநாயகர் மற்றும் பெரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த மே 3ம் தேதி வரை, தினமும் இரவு 7:30 மணிக்கு பகவதி அம்மன், விநாயகர் மற்றும் பெரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை விநாயகருக்கும், மதியம் பெரியம்மனுக்கும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பகவதி அம்மனுக்கு அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மே 5ம் தேதி காலை பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், மாலையில் மாவிளக்கு மற்றும் அக்னி கரகம் எடுத்து வருதலும் நடைபெறுகிறது. கீழ்கதவுகரை, மேல் கதவுகரை, வெள்ளாள பாளையம், சாமிநாதபுரம் மற்றும் மூணு கட்டியூர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.