ஆய்க்குடி விநாயகர் கோயிலில் பிப்.1ம் தேதி கும்பாபிஷேகம்
தென்காசி: ஆய்க்குடி அமர் விநாயகர் கோயிலில் வரும் பிப்.1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.ஆய்க்குடி அமர்சேவா சங்க வளாகத்தில் உள்ள அமர் விநாயகர் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து வரும் பிப்.1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு 30ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது.அன்று காலை அனுக்ஞை, கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்ரீஸுக்த ஹோமம், துர்க்கா ஸுக்த ஹோமம், ர÷க்ஷõக்ன ஹோமம், ஐக்ய மத்ய ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம், யந்திர ஜெபம் மற்றும் பூர்ணாகுதி நடக்கிறது.
மாலை யாகசாலை நிர்மானம், புண்யாகவாசனம், தனலட்சுமி பூஜை, மிருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, திக்பலி, அனுக்ஞை, கணபதி பூஜை, யஜமான வர்ணம், ஆசார்ய வர்ணம், ரக்ஷõபந்தனம், சுவாமி சங்கோஸம், யாகசாலை பிரவேசம், ஜெபகங்கள், மூலமந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடக்கிறது.விழாவின் இரண்டாம் நாளான 31ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஜெபம், மாலையில் சயன வாசம், உபசாரங்கள், விமான கலசம் பிரதிஷ்டை, இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜை, சுமங்கலி பூஜை, ஜெபங்கள், ஹோமம், திரவ்யாகுதி, யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல் மற்றும் பூர்ணாகுதி நடக்கிறது.விழாவின் முக்கிய நாளான பிப்.1ம் தேதி காலை நான்காம் யாகசாலை பூஜை, ஜெபங்கள், ஹோமங்கள், திரவ்யாகுதி, சபர்சாகுதி, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, விமானம் கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன், பொருளாளர் பட்டம்மாள், உப தலைவர் சீனிவாசன், இணை செயலாளர் கந்தசாமி, கமிட்டி உறுப்பினர்கள் சுமதி, சிதம்பரம், முருகையா ஆகியோர் செய்து வருகின்றனர்.