உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பூர் அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கடம்பூர் அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தூத்துக்குடி: கடம்பூர் அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.கடம்பூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்குப்பாத்தியப்பட்ட அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தங்ககொடிமரம் ஸ்தாபனம் விழா வரும் 23ம் தேதி நடக்கிறது. விழாவில் சென்னை கோல்டன் குரூப் நிறுவனங்கள் அதிபர் பாண்டியனார், நீதியரசர் ஜோதிமணி, ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் கலந்து கொள்கிறார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், பச்சைமால், கலெக்டர் ஆஷிஷ்குமார், எஸ்.பி.ராஜேந்திரன், எம்.எல்.ஏக்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, எர்ணாவூர் நாராயணன், மற்றும் துரைசாமி நாடார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 8.45 மணிக்கு நவக்கிரக ஹோமம் மாலை 5 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலியும் நாளை மாலை 6 மணிக்கு ரக்ஷாபந்தனம், இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகளும், இரவு 9.30 மணிக்கு பொள்ளாச்சி வரதராஜனின் ஆன்மிக சொற்பொழிவு. 21ம் தேதி திங்கள் காலை 9.25 மணிக்கு ராஜகோபுர தங்கக்கலசம் திருவீதி உலா வருதல்,மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள், இரவு 9.30 மணிக்கு நெல்லை கண்ணனின் ஆன்மிக சொற்பொழிவு. 22ம்தேதி செவ்வாய் காலை 8.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், காலை 11 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள், மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜைகள், இரவு 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகள் ஆகியவையும், இரவு 9.30 மணிக்கு அம்மையப்பன்,வேல்முருகன் குழுவினரின் நாதஸ்வர இசையும், 23ம்தேதி புதன் காலை 9.30 மணிக்கு விமானம், ராஜகோபுரம், தங்கக்கொடிமரம், திருக்குடநன்னீராட்டும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் இரவு 7 மணிக்கு விஜயசெல்வியின் ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி, அனிதாகுப்புசாமி ஆகியோரது நாட்டுப்புற மற்றும் பக்தி இசை, இரவு 9 மணிக்கு அம்பிகை,விநாயகர் திருவீதி உலாவருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சௌந்தரபாண்டியன், திருப்பணிக்குழுச்செயலாளர் தங்கப்ப நாடார் அறங்காவலர் குழுத்தலைவர் ஜனார்த்தனன் மற்றும் திருப்பனிக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !