வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா துவக்கம்
வத்தலக்குண்டு, முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக நேற்று மஞ்சள் ஆற்றில் இருந்து கம்பம் எடுத்துவரப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு, முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கோயிலில் நடப்பட்ட கம்பத்தில் பால் மற்றும் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தனர். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி கொண்டனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா கமிட்டியார்கள், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உபயதாரர்கள் பக்தர்கள் பங்கேற்றனர். மே 13ல் இருந்து மண்டபப்படிகளில் அம்மன் எழுந்தருளுகிறார். மே 26ல் அம்மன் பூ பல்லக்கில் வலம் வருதல், அடுத்த நாள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல் மே28 முளைப்பாரி, வண்டி வேஷம், மே29 முத்து பல்லக்கில் அம்மன் பவனி வருதல், மே30 மஞ்சள் நீராட்டு, ஊஞ்சலாட்டு வைபோகம் நடைபெறுகிறது. ஜூன் 2ல் மறு பூஜை, தெப்பத் திருவிழா நடைபெறும்.