உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலம்

ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர், ராயபுரம் மெயின் ரோடு, சின்னான் நகர் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது. அதனையொட்டி, ஸ்ரீமதுரை வீரன் கருப்பராயன், ஸ்ரீமாகாளியம்மன்103 ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பார்க் ரோடு ராகவேந்திரர் கோவிலில் இருந்து அம்மன் அழைத்து வருதல், நேர்ந்து கொண்ட பக்தர்கள் அலகு குத்துதல், இளநீர் காவடி எடுத்தல் ஆகியன நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, மதியம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அன்றைய தினம் மாலையில், மாவிளக்கு பூஜை மற்றும் மதுரைவீரன் ஆட்டம் நிகழ்ச்சிநடந்தது. விழாவில், இன்று காலை பிரார்த்தனை செய்து கொண்ட பக்தர்கள், அதனை நிவைவேற்றும் வகையில், உருவாரம் எடுக்கும் நிகழ்ச்சியும், மாலையில் பூவோடு ஊர்வலமும் நடக்கும். பொங்கல் விழாவில், நாளை (8ம் தேதி) காலை வேடமிடுதல் நிகழ்ச்சியும், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !