திருப்பூர் மேட்டுமாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :3 days ago
திருப்பூர்: திருப்பூர், போயம்பாளையம், ஸ்ரீமேட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று, விமரிசையாக நடந்தது. இக்கோவிலின், 19வது ஆண்டு பொங்கல் விழா, 1ம் தேதி பொட்டுசாமி பொங்கலுடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி கணபதி ேஹாமம், பொரி மாற்றுதல், கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, அம்மை அழைத்தல், படைக்கலம் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் பூஜைகள் நடந்தன; மாலையில், கம்பம் மற்றும் கும்பம் கங்கையில் விடப்பட்டது இன்று மஞ்சள் நீர் விழாவும், நாளை அலங்கார பூஜைகளும் நடக்கிறது.