திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம்
திருவாரூர்: உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழா வெள்ளோட்டம் நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் பூமிக்கு உரிய தலமாகவும் சர்வதேச பரிகார தளமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. மேலும் சமயக்குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது இந்த கோவிலில் மூலவராக வணிகநாதரும் உற்சவர் ஆக தியாகராஜனும் அருள் பாதித்து வருகின்றனர் இந்த கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளம் சுமார் ஐந்து வேலி பரப்பளவை கொண்டது. இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் அதேபோல தெப்ப திருவிழாவும் ஆண்டுதோறும் நடைபெறும்.
இந்த பிரமாண்ட தெப்பம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் 432 பேரல்களை பயன்படுத்தி 2300 சதுர அடி அகலத்திலும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக தெப்பம் கட்டப்பட்டுள்ளது இந்த தெப்ப தேரோட்டம் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் இரவு பார்வதி சமேத கல்யாண சுந்தரர் எழுந்தருளி தெப்பத்தில் மூன்று சுற்றுகள் கமலாலய குலத்தில் வலம் வர உள்ளனர். நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பத்தை ஒட்டி இன்று வெள்ளோட்ட தெப்பம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் வருகை குறித்து வெள்ளோட்ட தெப்ப விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.