உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி மடாதிபதி சுவாமிகளுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு

சிருங்கேரி மடாதிபதி சுவாமிகளுக்கு கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு

பாலக்காடு: கேரள மாநிலம் கோழிக்கோடு தளி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக கேரளா வருகை தந்த சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளுக்கு, கேரள-கர்நாடக எல்லையில் சிறப்பான பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கேரள ​மாநில அரசின் விருந்தினராக வருகை தந்த சுவாமிகளை, கேரள எல்லையில் ஆதிசங்கர டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி ஆனந்த், பாலக்காடு சிருங்கேரி மட நிர்வாகி கரிம்புழ ராமன், கோழிக்கோடு பிராமண சபை செயலாளர் பாலமுரளி, பாலக்காடு பிராமண சபையைச் சேர்ந்த கிருஷ்ணன், நடராஜன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து, பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ​சுவாமிகளை வரவேற்பதற்காக மாநில அரசின் சார்பில் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் மற்றும் காசர்கோடு மாவட்ட எஸ்.பி. விஜய் பாரத் ரெட்டி ஆகியோர் நேரில் வந்திருந்து பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளை கவனித்தனர். ​சுவாமிகளின் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல் 8, 9, 10ம் தேதி ஆகிய நாட்களில் கோழிக்கோடு தளி சமூக மடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று நாட்களும் பக்தர்களுக்கு சுவாமிகளின் தரிசனமும், மாலை வேளைகளில் விசேஷ அருளுரையும் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிருங்கேரி சுவாமிகளின் வருகையை ஒட்டி கோழிக்கோடு பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !