உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சாங்கத்தில் கூறியது அப்படியே நடக்குது..! நடிகருக்கு அரசியல் செல்வாக்கு உயரும்.. எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் நிற்கும்..!

பஞ்சாங்கத்தில் கூறியது அப்படியே நடக்குது..! நடிகருக்கு அரசியல் செல்வாக்கு உயரும்.. எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் நிற்கும்..!

மதுரை: பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் அணிவகுத்து நிற்கும் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழக அரசியலில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட நடிகர் விஜயின் த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு‌.க.,வை பின்னுக்குத் தள்ளியது. இதனையடுத்து, த.வெ.க., ஆட்சி அமைக்க, 118 இடங்கள் தேவை எற்றுள்ள சூழலில், இதர கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது. இவ்வாறு, தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக காணப்படும் நிலையில் , எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் அணிவகுத்து நிற்கும் எனவும்; கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் 2026-27ம் ஆண்டுக்கான ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாங்கத்தின் மற்றொரு பக்கத்தில், நடிப்புத் துறையில் உள்ள நடிகருக்கு அரசியல் செல்வாக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள இத்தகவல்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., கட்சி, ஏற்கனவே, த.வெ‌ க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள், ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையே, த.வெ.க., ஆட்சி அமைப்பதை தடுக்கும் விதமாக, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் அணிவகுத்து நிற்கும் என்றும்; கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களை போன்று, த.வெ.க.,வுடன் இதர கட்சிகள் இணையும் ஆட்சி அமையுமா? அல்லது  தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும், அக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.‌


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !