சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம்
ADDED :16 hours ago
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா ஏப். 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாள, யானை, ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். நான்கு நாட்களுக்கு முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் . இரு நாட்களுக்கு முன்பு கயர் குத்து திருவிழா நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்பிகை திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி புரிந்தார். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.