உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.


செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 26 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் விழாவாக 6ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.  7ம் தேதி பால்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மச்சாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குங்குமத்தால் 1008 அர்ச்சனை செய்து திருவிளக்கு பூஜை செய்தனர். பெண்களுக்கு மங்கள பொருட்களை பிரசாதமாக வழங்கினர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, வழக்கறிஞர் விஜய் மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இன்று இரவு 10 மணிக்கு செல்வ விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், அம்மச்சாரம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகள் பூ பல்லக்கும், நாளை 10ம் தேதி 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !