போடி பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழா
போடி: போடி அருகே பத்திரகாளிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
தேர்தல் மட்டும் இன்றி எப்போதுமே கட்சிக் கொடி, போஸ்டர்கள் ஒட்டாமல் தடை செய்யப்பட்ட முன் மாதிரியாக திகழ்ந்து வரும் கிராமமாக போடி அருகே பத்திரகாளிபுரம் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 5 நாட்கள் விமர்சையாக நடைபெறும். தேனி மாவட்டம் மட்டும் இன்றி பல்வேறு பகுதியில் இருந்து வந்து இங்குள்ள பத்திரகாளியம்மனை தரிசித்து வருவரோடு, காவடி, தீச்சட்டி, பால்குடம், எடுத்தும், மேலதாளத்துடன் பொய்கால் குதிரை ஆட்டம், பலர் உருண்டு கொடுப்பதோடு, அலகு குத்தி வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தும், கிடா வெட்டி. தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.