உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்

விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்

விருத்தாசலம்: விருத்தாசலம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், செடலணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் செல்வராஜ்நகர், முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 11:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு பாலபிேஷகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !