உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஏப்.29 இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்தபின், தேரோடும் வீதியில் பவனி வந்தார். முக்கிய வீதிகளின் வழியாக தேர் வந்து நிலையை அடைந்தது. நேற்று அதிகாலையில் பூ பல்லக்கு நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !