உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் பார்த்தசாரதி பெருமாள்

வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் பார்த்தசாரதி பெருமாள்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவத்தில் நேற்று, வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில், பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலித்தார்.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோத்சவம் கடந்த, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 3ம் தேதி கருட சேவை உத்சவமும், 5ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு உத்சவம், நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் பார்த்தசாரதி பெருமாள் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு குதிரை வாகன புறப்பாடு நடந்தது. இன்று காலை ஆளும் பல்லக்கும், காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உத்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !