மாரியூரில் தேவார திருப்பதிகம் முற்றோதல்
ADDED :1 hours ago
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் தேவாரப் பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசர் என்றழைக்கப்படும் அப்பரின் நட்சத்திர விழா கொண்டாடப்பட்டது.
ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தேவாரத்தில் பல பதிகங்களை பாடியுள்ளார். நேற்று காலை மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் நடராஜப் பெருமான், சிவகாமி அம்மன், அப்பர் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
காலை 9:00 மணி முதல் மதியம் வரை அருப்புக்கோட்டை கயிலை மணி ராமசுப்பிரமணியம் குழு சார்பில் தேவார திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.