உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் அடுத்த மாதம் சத்சங்க விழா

திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் அடுத்த மாதம் சத்சங்க விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சத் சங்கம் சார்பில் ராமநவமி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


திருக்கோவிலூர் சத் சங்கம் சார்பில் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் நரசிம்மன் அய்யங்கார் தலைமையில் நடந்தது. சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். வரும் ஜூன் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஆஞ்சநேயர் கோவில் சத்சங்கம் சார்பில் 61 வது ஆண்டு ராம வநமி மகோத்சவ விழாவை நடத்துவது எனவும், இதில் பரனுர் கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் குமாரர் ஹரிஜி சுவாமிகளின் உபன்யாசம் தினசரி நடைபெறும், 11ம் தேதி ராமர் திருக்கல்யாண உற்சவத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !