திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :35 minutes ago
காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வரும் 20ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, 25ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா, 27ம் தேதி தேரோட்டம், 28ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா, 29ம் தேதி தெப்ப உற்சவம், 30ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதியுலா, விசாக தீர்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதின கட்டளை விசாரணை சிவகுருநாதர் தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.