உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூச விழா: காவடி ஏந்தி பாதயாத்திரை!

தைப்பூச விழா: காவடி ஏந்தி பாதயாத்திரை!

தேவகோட்டை: பழனி தைப்பூச விழாவிற்காக, தேவகோட்டை வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். திண்டுக்கல், பழனியில் தைப்பூச விழா துவங்கியுள்ளது. இதில், பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நேற்று, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ஆர்.எஸ்.,மங்களம், ராமநாதபுரம், திருவாடானை, சருகணி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்து,நேற்று பாதயாத்திரை புறப்பட்டனர். தேவகோட்டைக்கு வந்த பக்தர்கள்,நேற்று காலை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, பாதயாத்திரையை துவக்கினர். தேவகோட்டை, ஆறாவயல், கல்லுப்பட்டியை சேர்ந்த நகரத்தார்கள், 50க்கும் மேற்பட்ட காவடிகளை ஏந்தி, புறப்பட்டனர். நால்வர் கோயில் முன் நிர்வாகி அருசோமசுந்தரம் தலைமை யில் பக்தர்கள் காவடிகளுக்கு மரியாதை செய்தனர். பாதயாத்திரை பக்தர்கள் நேற்று மாலை குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் தங்கி, இன்று காலை மீண்டும் பயணத்தை துவக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !