காஞ்சி சங்கரமடத்தில் எல்லாம் தரும் ஏகாதசி விரதம் நுால் வெளியீட்டு விழா
ADDED :15 hours ago
காஞ்சி: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது ஜெயந்தியையொட்டி, புலவர் வே.மகாதேவன் எழுதிய ‛எல்லாம் தரும் ஏகாதசி விரதம்’ என்ற நுால் வெளியீட்டு விழா, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று நடந்தது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் பெற்று கொண்டார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.