நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :12 hours ago
நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உட்பட 18 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தியும், கோவிலை வலம் வந்து சுவாமியும் அருள்பாலித்தனர். இதேபோல, கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.