உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே அகத்தாரிருப்பு கிராமத்தில் வேப்பமரத்து முத்துமாரியம்மன் கோயில் 38ம் ஆண்டு சித்திரை பொங்கல் விழா கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்புபூஜை நடந்தது.ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர்.காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முத்துமாரியம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.அப்போது அன்னதானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி தூக்கி சென்று ஊருணியில் கரைத்தனர். விழாவில் கமுதி,சென்னை,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !