நாளை சனி ஜெயந்தி: சங்கடம் யாவும் தீர இருக்கு எளிய வழிபாடு!
சனி ஜெயந்தி என்பது நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் அவதரித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத அமாவாசை திதி அன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி நாளை மே 16ல் வருகிறது. சனிக்கிழமையிலேயே சனி ஜெயந்தி அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும், சனி பகவானின் அருள் பெறவும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். எள் விளக்கு ஏற்றுதல்: சனிக்கிழமை காலை அல்லது மாலை வேளையில் அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது நவகிரக சன்னதியில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானுக்கு உகந்த நிறமான கருப்பு நிற ஆடைகளை உடுத்துவது அல்லது கருப்பு உளுந்து, எள் போன்றவற்றை தானம் செய்வது நல்லது. சனி பகவானின் வாகனமான காகத்திற்கு அன்றைய தினம் காலையில் மறக்காமல் உணவு (முக்கியமாக எள் கலந்த சாதம்) வைக்க வேண்டும். ஓம் சனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபடலாம். சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். எனவே, இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு ம், முடிந்த உணவு அல்லது உதவிகளை வழங்குவது சனி பகவானின் பூரண அருளைப் பெற்றுத் தரும்.