உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வைகாசி கிருத்திகை விழா இன்று விமர்சையாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அமாவாசையான இன்று வைகாசிமாத கிருத்திகை விழா, விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள், சரவண பொய்கையில் நீராடி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் திருவீதியுலா மாடவீதிகளில் நடந்தது. முன்னதாக பரணி உத்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !