உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஆத்ம லிங்கேஸ்வரர் சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

கோவை ஆத்ம லிங்கேஸ்வரர் சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

போத்தனூர்: கோவை, மலுமிச்சம்பட்டியிலுள்ள ஆத்ம வித்யாலயத்தில், ஆத்ம லிங்கேஸ்வரர் சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று விக்னேஸ்வர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து பூஜையும் இதையடுத்து முதற் கால வேள்வியும், சுவாமி பிரதிஷ்டையும் நடந்தது. இன்று அதிகாலை, விக்னேஸ்வர் பூஜை, தேவதா அனுக்ஞை, அனுக்ஞை, இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து 7:00 மணிக்கு மேல், ஆத்ம லிங்கேஸ்வரர் சுவாமிக்கு (சிவலிங்கம்) புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்டவை நட ந்தன. பக்தர்கள் பங்கேற்று சிவலிங்கத்தை வழிபட்டு சென்றனர். இதுகுறித்து சங்கரானந்தா சுவாமி கூறுகையில்," வித்யாலயத்தில் இருந்த சம்ப்பதானந்தா சுவாமி கடந்த மாதம், 9ல் விதேக முக்தியடைந்தார். அவரது நினைவாக இக்கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, என்றார். ஏற்பாடுகளை சங்கரானந்தா சுவாமியுடன், பூமா சங்கரானந்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !